தமிழ்நாடு முழுவதும் இன்று தேசிய பார்வையற்றோர் இணையம் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் நடைபெற்றது
அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் நிர்வாகி பவுன்துரை தலைமையில் மாற்றுத்திறனாளிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை (OAP) ஆக மத்திய அரசு 300 ரூபாயும்,

மாநில அரசு 1200 ரூபாயும் சேர்த்து மொத்தம் 1500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப இதை 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
அதேபோல், தற்காலிக பணியில் உள்ள மாற்றுத்திறனாளி பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும். அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும், பார்வையற்றோருக்கும் தகுதித் தேர்வு நடத்தி பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகள் குறித்து ஒன்றரை மாதத்திற்கு முன்பே மனு அளித்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இன்று தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துகிறோம்” என்றார்.
போராட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர் கலந்து கொண்டனர்.
