ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில், 2,000 ஆண்டுகள் பழமையான வரலாற்று தடயங்கள் மற்றும் அரிய வகை நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் மாயகிருஷ்ணன் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்த ஆய்வில், மேற்கு ரோமானிய பேரரசர் 2-ம் வேலண்டைன், முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், மதுரை சுல்தான்கள் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி காலத்தை சேர்ந்த நாணயங்களும் உலோக உருக்கு பொருட்களும் கிடைத்துள்ளன.
அழகன்குளத்தில் 2,000 ஆண்டுகால வரலாற்றுத் தடயங்கள்! கண்டுபிடிப்பு
