தமிழகத்தின் ஓசூரை சேர்ந்த விமானி கார்த்திக் என்பவர், வியட்நாம் நாட்டை சேர்ந்த ஆசிரியை சியோ டிங்கன் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார். வியட்நாமின் ஃபூ குவோக் தீவில் ஆசிரியையாக பணியாற்றி வரும் சியோ டிங்கனுக்கும் கார்த்திக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் மலர்ந்த காதல், இருவீட்டார் சம்மதத்துடன் இன்று ஓசூரில் இனிதே திருமணத்தில் முடிந்துள்ளது. இத்திருமணம் குறித்து பேசிய மணப்பெண் சியோ, கார்த்திக்குடன் உண்மையான காதல் உறவில் இருக்க விரும்பியதாலேயே இந்தியா வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
வியட்நாம் பெண்ணை மணந்த தமிழக பைலட்
