விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை அரிவாளால் வெட்டியும், கல்லால் தாக்கியும் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். இந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி கொத்தனார் காலனியைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மனைவி பொன்னழகு. அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இந்நிலையில், பொன்னழகுக்கும் ஆனந்தராஜுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த சரவணகுமார், ஏற்கனவே தனது மனைவியைக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, நேற்று இரவு ஆத்திரமடைந்த சரவணகுமார், தனது மனைவி பொன்னழகு மற்றும் ஆனந்தராஜ் ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியும், கல்லால் தாக்கியும் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
