சேலத்தில் பேசிய தனியரசு, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் குற்றம்சாட்டினார். சினிமா கவர்ச்சி அரசியலைக் கெடுத்துவிட்டதாகவும், இனி சினிமா கவர்ச்சியை நம்பி அரசியல் தொடங்கும் தனுஷ், திரிஷா உள்ளிட்ட யாருக்கும் ஒரு வாக்கு கூடப் போடக்கூடாது என்றும் கூறினார். சினிமாவில் நடித்தவர்களே முதல்வராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பது தமிழர் மாண்புக்கு இழுக்கு எனவும் சாடினார்.
தனுஷ், திரிஷாவுக்கு வாக்களிக்காதீர்கள்: தனியரசு பேட்டி
