Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பதியில் ஒரே நாளில் 68,495 பக்தர்கள் தரிசனம்

திருப்பதியில் ஒரே நாளில் 68,495 பக்தர்கள் தரிசனம்

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (நவ.16) ஒரே நாளில் 68 ஆயிரத்து 495 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 26 ஆயிரத்து 977 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியல் மூலம் ரூ.4 கோடியே 8 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும், பக்தர்களுக்காக 3 லட்சத்து 51 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 19 ஆயிரம் பேர் அன்னப்பிரசாதம் பெற்றனர். இதில், இலவச தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் 15 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

error: Content is protected !!