தலைவன் எவ்வழியோ, தொண்டன் அவ்வழி என்பதுபோல், தவெக தலைவர் விஜய்யின் வழியில் தவெக தொண்டர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என்று அனைவருமே ‘ரீல்ஸ்’ மோகத்தில் ஆழ்ந்து, மக்களின் அடிப்படை பிரச்சனைகளை திசை திருப்பும் ஒரு மோசமான ஆட்சியை தவெக கூட்டணி அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், தவெக-வினர் பக்தி மேடைகளை ‘ரீல்ஸ்’ மோகத்திற்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று சாடியுள்ளார்.
மோசமான ஆட்சியை தரும் தவெக கூட்டணி அரசு-இபிஎஸ் தாக்கு
