Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அன்புமணி: அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வலியுறுத்தல்!

அன்புமணி: அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வலியுறுத்தல்!

மேகதாது அணை விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “காவிரி விவகாரம் என்பது தமிழ்நாட்டின் உயிர்நாடி ஆகும். பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழகம் காவிரி நீரைப் பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் ஒருவர் திடீரென வந்து, ‘இது எங்கள் உரிமை’ என்று கூறி, மேகதாது என்ற பகுதியில் அணையைக் கட்ட முற்படுகிறார். அதுவும் நாட்டின் பிரதமர் மேடையில் இருக்கும்போதே, கர்நாடக முதலமைச்சர் இது தங்கள் உரிமை என்றும், தாங்கள் அணையைக் கட்டியே தீருவோம் என்றும் கூறுகிறார்.

மேலும் உச்ச நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்துவிட்டது என்றும் கூறுகிறார். நாட்டின் முன்னிலையில் ஒரு முதலமைச்சர் பொய் பேசுவது என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று. கர்நாடகாவில் அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் எந்த அனுமதியும் வழங்கவில்லை என்றார். தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், மேகதாது அணையை கட்ட நாங்கள் விட மாட்டோம்; ஒரு செங்கல்லைக் கூட நாங்கள் வைக்க அனுமதிக்க மாட்டோம். இது முழுமையாகத் தமிழ்நாட்டின் உயிர்நாடியாகும்.

இந்த விவகாரத்தில் தீர்க்கமான முடிவெடுக்க மற்றும் உரிய ஆலோசனைகளை பெற்று செயல்பட தவெக அரசு நிச்சயமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இந்தக் கூட்டத்தைக் கூட்டுமாறு நான் நூற்றுக்கும் மேற்பட்ட முறை தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம், மத்திய நீர் ஆணையம் அல்லது எந்தவொரு சட்டம் அல்லது ஒப்பந்தத்தையும் மதிக்காத கர்நாடகா, ஆற்றின் மேல் பகுதியில் அணையைக் கட்டி நீரின் கட்டுப்பாட்டைத் தன்வசப்படுத்தினால், அவ்வளவு தான்; தமிழ்நாடு அழிந்துவிடும்” என்றும் குறிப்பிட்டார்.

error: Content is protected !!