ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குருமந்தூர் பகுதியில், புதிதாக கட்டப்பட்ட பள்ளிவாசலின் திறப்பு விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த இந்து மக்கள், மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இனிப்புகள், பழங்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை ஏந்தியபடி மேளதாளங்களுடன் ஊர்வலமாகச் சென்று பள்ளிவாசலுக்கு வழங்கினர். பல தலைமுறைகளாகத் தொடரும் இந்த சகோதரத்துவத்தைப் போற்றும் வகையில், இஸ்லாமிய மக்கள் அவர்களை நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
கோபியில் பள்ளிவாசல் திறப்பு: இந்துக்கள் வழங்கிய சீர்வரிசை
