Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற திமுக நிர்வாகி திடீர் மரணம்

தூத்துக்குடி காந்திநகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் கிளாஸ்டன் (50). மீனவரான இவர், 40-வது வார்டு திமுக நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், 11 நாட்களுக்குப் பிறகு இன்று (திங்கள்கிழமை) தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து சக மீனவர்களுடன் ஒரு விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார்.

உவரி அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கிளாஸ்டனுக்குத் திடீரெனக் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள், அவருக்கு உடனடியாக முதலுதவி அளித்ததுடன், விசைப்படகை அவசரமாகத் திருப்பித் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்குக் கொண்டு வந்தனர்.

பின்னர் துறைமுகத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கிளாஸ்டன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கூடங்குளம் மரைன் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பேச்சிமுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

error: Content is protected !!
Secret Link