தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நீலமேகபுரம் தோட்ட பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சம்பவ இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த வனத்துறையினர் அங்கு சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்ததுடன், அதனை கூண்டு வைத்து பிடிக்க ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் தேவையின்றி மலையடிவார பகுதிகளில் நடமாட வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி ஆழ்வார்குறிச்சி அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
