Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் பெரிய கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி தஞ்சாவூர் பெரிய கோயிலில் 1,008 சங்காபிஷேகம் நேற்று நடைபெற்றது.
கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கார்த்திகை மாத முதல் சோமவாரமான நேற்று, தஞ்சாவூர் பெரிய கோயிலில், பெருவுடையார் சன்னதி முன்பு 1,008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
இதையடுத்து 1,008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் பெருவுடையாருக்கு மாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இந்த அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!
Secret Link