மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடித்துள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஆச்சி ஆச்சி’ நாளை (நவ.24) வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும்

இப்படம், மணிரத்னம்-இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியின் 19-வது படைப்பாக உருவாகி வருகிறது. நடிகை சைத்ரா ஜே.ஆச்சார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்புதிய காதல் திரைப்படம், 2027-ம் ஆண்டு ஜன.29-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது
