Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே இளம்பெண் மர்ம சாவு- உறவினர்கள் சாலை மறியல்

திருச்சி அருகே இளம்பெண் மர்ம சாவு- உறவினர்கள் சாலை மறியல்

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள இனாம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (33) விவசாயி இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்டம் கவுண்டம்பட்டி அருகே உள்ள தெற்கு பட்டி கிராமத்தை மீனா (30) என்பவரை திருமணம் செய்தார்.
இந்நிலையில்தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த மீனா நேற்று திடீரென்று மயங்கி இறந்து போனார்.இந்நிலையில் மீனாவின் பெற்றோர் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மீனாவின் மரணம் குறித்து சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீனாவின் உடலில் காயங்கள் உள்ளன. ஆகவே அவரை அவரது குடும்பத்தினர் அடித்து கொலை செய்து விட்டதாக கூறி உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது காவல்துறை தரப்பில் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது அவரிடம் முறையீடு செய்யுங்கள் என கூறினர் அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்

error: Content is protected !!
Secret Link