Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தஞ்சையில் பாஜக ஆர்ப்பாட்டம்!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தஞ்சையில் பாஜக ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் தஞ்சாவூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் பாஜகவினர் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ் தலைமை வைத்தார்.
இதில் வடக்கு மாவட்ட அமைப்பாளர் பூண்டி வெங்கடேசன் மாவட்ட துணைத் தலைவர் சூரக்கோட்டை ராஜா மாநில செயற்குழு உறுப்பினர்கள் கர்ணன் உமாபதி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் மதுரை மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவை உடனடியாக நீக்க வேண்டும் திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!
Secret Link