Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் பேருந்துக்குள் கொட்டிய மழைநீர்: பயணிகள் அவதி!

கரூரில் மழை பெய்தபோது நகரப் பேருந்தின் மேற்கூரை வழியாக மழைநீர் உள்ளே கொட்டியதால், பயணிகள் அவதி வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

இன்று மதியம் 2.30 மணியளவில், வேலூரில் இருந்து கரூர் நோக்கி, மண்மங்கலம் அடுத்த செம்மடை வழியாக அரசு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது பெய்த மழையின் காரணமாக, பேருந்தின் மேற்கூரை வழியாக மழைநீர் உள்ளே ஒழுகியது. இதனால் பேருந்துக்குள் பயணம் செய்த பொதுமக்கள் மழைநீரில் நனைந்து கடும் அவதிக்குள்ளாகினர்.

பேருந்துக்குள் மழைநீர் கொட்டியதைப் பயணிகள் சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற பழுதடைந்த பேருந்துகளை உடனடியாகப் பணிமனைக்கு கொண்டு சென்று, பழுதுகளைச் சரிசெய்த பின்னரே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்க வேண்டும் எனவும்,

மேலும், பயணிகள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் தங்களது ஊர்களுக்குச் செல்லும் வகையில், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்.

மழைக்காலங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பழுதடைந்த பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

error: Content is protected !!
Secret Link