Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் போட்டியா? பெ.சண்முகம் பேட்டி

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுமா என்பது குறித்து அக்கட்சி செயலாளர் பெ.சண்முகம் பேட்டி அளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் பெரிய கலவரங்கள் ஏதும் இல்லாவிட்டாலும் அன்றாடம் நடைபெறும் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைகளை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். ​வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் டெல்டாவில் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே கர்நாடகாவிடமிருந்து தமிழகத்துக்கு தர வேண்டிய 15 டிஎம்சி நிலுவை தண்ணீரை பெற்றுத்தர ஒன்றிய அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் விரைவில் நடக்கவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுவது குறித்து மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!
Secret Link