Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவிரி–குண்டாறு திட்டம்: காங்கிரஸ் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்வதையே காங்கிரஸ் கட்சி கொள்கையாகக் கொண்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி–குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தண்ணீர் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்றும், விவசாயத்தைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்திருந்தால்தான் இத்திட்டங்களின் அருமை புரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணையைக் கட்டக்கூடாது எனத் தமிழ்நாடு போராடுவது கீழ்ப்படுகை மாநிலத்திற்கான உரிமை எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தமிழகத்தின் நீர்ப்பாசனத் திட்டங்களுக்குக் கர்நாடக அரசு தடை கோருவது அப்பட்டமான அடாவடித்தனம் என்றும் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Secret Link