நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாச்சனா நமிதாஸ் நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படத்தை ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் பாராட்டியுள்ளார். படத்தை பார்த்த பிறகு அதிலிருந்து தன்னால் வெளிவர முடியவில்லை என்றும், சாச்சனா நமிதாஸ் ஒரு அற்புதமான நடிகை என்றும் அவர் புகழ்ந்துள்ளார். மேலும், கதாநாயகனின் இடத்தில் தான் இருந்திருந்தால் செல்வம் கதாபாத்திரத்தை கொன்றிருப்பேன் எனவும் டாம் ஹாங்க்ஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மகாராஜா’ படத்தில் இருந்து மீள முடியவில்லை: நடிகர் டாம் ஹாங்க்ஸ்
