Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் வெண்ணமலை கோவில் நில ஆக்கிரமிப்பு: கடைக்கு சீல்!

கரூர் வெண்ணமலை முருகன் கோவிலுக்குச் சொந்தமான நிலம்… ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் ஒரு கடைக்கு மட்டும் சீல்!

கரூர் வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சொந்தமான பல நூறு ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், கோவிலுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் வீடுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா தலைமையில், கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள 9 கடைகள் மற்றும் ஒரு குடியிருப்புக் கட்டிடத்திற்கு சீல் வைக்க அதிகாரிகள் திட்டமிட்டனர்.
இதற்காக போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
அப்போது, ஒரு குடியிருப்பு மற்றும் 8 கடைகளின் உரிமையாளர்கள், கோவில் நிர்வாகத்திடம் வாடகைதாரர்களாகத் தொடர ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கரூர் காதப்பாறை பகுதியில் கிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான ஒரு கடைக்கு மட்டும் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!
Secret Link