தொகுதி மறுவரையறை கூடாது, என்ற காரணத்தை முன்வைத்து,
நாளை 28 ம் தேதி அனைத்து சட்ட மன்ற தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கன்டன சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் கோவை விமான நிலையத்தில் தொல் திருமாவளவன் பேட்டி..
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் சேலம், செல்வதற்காக கோவை விமான நிலையம் வருகை தந்தார், விமான நிலையத்தில் அவருக்கு உற்ச்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது..
நவம்பர 27 மாவீரர் நாள், ஈழ விடுதலைக்காக பலியான அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு தரும்புரியில் நடைபெறுகின்றது. அதில் பங்கேற்கின்றேன் அதற்காக கோவை வந்துள்ளேன் இங்கிருந்து சாலை மார்க்கமாக அங்கு செல்ல உள்ளதாக கூறினார்.
நாளை 28 ம் தேதி அனைத்து சட்ட மன்ற தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது
தொகுதி மறுவரையறை கூடாதென்ற காரணத்தை முன்வைத்தும், 543 தொகுதிகளிலும் மீண்டும் 25 ஆண்டுகளுக்கு நிலையாக தொடர வேண்டும் என்பதை வலியறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
செங்கல்பட்டு தொகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கின்றேன் என்று கூறியவர்
நாடாளுமன்ற கூட்ட தொடரில், தொகுதி மறுவரை மசோதவை கொண்டு வந்து நிறைவேற்ற பா.ஜ.க முயல்கின்றது இதனை ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்று கொள்ளாது என்றார்.
