Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இழப்பீடு வழங்காததால் 2 அரசு ஏசி பஸ்களை ஏலம் விட திருச்சி நீதிமன்றம் உத்தரவு!

திண்டுக்கல் மாவட்டம் பண்ணப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 39). இவர் மதுரையில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்தார். கடந்த 2023ல் பணி நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் மதுரையில் இருந்து விருதுநகர் சென்றபோது விபத்தில் சிக்கினார். விருதுநகரில்
மோட்டார் சைக்கிள் மீது மதுரை எதிரே வந்த மதுரை கோட்ட அரசு பேருந்து மோதியதில், அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டு செயலிழந்தது.
இது தொடர்பாக விருதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சின்னத்துரை ஓட்டிச் சென்று
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் திருச்சியை சேர்ந்த அவரது மாமனாருக்கு சொந்தமானது. அவர் அந்த மோட்டார் சைக்கிளுக்கு திருச்சியில் இன்சூரன்ஸ் கட்டி வந்தார். இதையடுத்து சின்னத்துரை விபத்துக்கு நஷ்ட ஈடு கேட்டு திருச்சி சிறப்பு சார்பு (மோட்டார் வாகன விபத்து வழக்குகள்) நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2025 நவம்பரில், பாதிக்கப்பட்ட சின்னத்துரைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்டம் ரூ.69 லட்சம் நஷ்ட ஈடு வழங்க தீர்ப்பளித்தது. பின்னர் நஷ்ட ஈடு வழங்காமல் காலதாமதம் செய்ததால் கடந்த 6 மாதங்களுக்கு பஸ்களை ஜப்தி செய்ய திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி திருச்சி வந்த மதுரை கோட்டத்துக்கு சொந்தமான இரண்டு குளுகுளு ஏசி பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது.
அதன் பின்னரும் பாதிக்கப்பட்ட சின்னதுரைக்கு நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை.
மதுரை கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக தரப்பில் தங்களிடம் போதிய நிதி இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து நீதிபதி ராமதாஸ் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு ஏசி பஸ் களையும் வருகிறேன் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் ஏலம் விட்டு பாதிக்கப்பட்ட சின்ன துரைக்கு நிதியை வழங்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் வழக்கறிஞர் பி நடராஜன் ஆஜரானார்.
பொதுவாக அரசு பஸ்களை ஜப்தி செய்தால் உடனே நிர்வாக தரப்பில் பணம் செலுத்தி அந்த பஸ்களை மீட்டு செல்வது வழக்கம். ஆனால் தற்போது ஏலம் வரை சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!
Secret Link