கோவை மாவட்டம் சூலூரில் 10 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக், மோகன் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இருவருக்குமான தண்டனை விவரம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
