கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே, சபரிமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் முடித்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் பயணித்த மாருதி கார், லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மணிகண்டன், கோவிந்தன் மற்றும் பழனிவேல் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்த நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
