மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 20 வீரர்கள் படுகாயமடைந்தனர். அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள தில்லாபெரி மாகாணத்தின் சனம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படை முகாமை குறிவைத்து, வியாழக்கிழமை அதிகாலை ஆயுதம் ஏந்திய கும்பல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் பல தாக்குதல்தாரிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் தளவாடங்கள் அழிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நைஜரில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. 13 ராணுவ வீரர்கள் பலி
