திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே தாழம்பாடியைச் சேர்ந்த ஆசிரியர் காந்தி, குழந்தைத் திருமணத்திற்கு எதிராக விழிப்புணர்வு பாடல் பாடி பள்ளி மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியா என்ற பிரச்சாரத்தின் கீழ், குழந்தை, இளம்வயது மற்றும் கட்டாயத் திருமணங்களை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்று (நவம்பர் 27)

கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற குழந்தைத் திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தொடர்ந்து, குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள், மாணவிகளின் கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படுவது குறித்து ஆசிரியர் காந்தி விழிப்புணர்வு பாடல் பாடினார்.

குழந்தைகளின் கனவுகளைச் சிதைக்கும் குழந்தைத் திருமணத்தைத் தடுக்க வேண்டும் என்ற கருத்தை எடுத்துரைத்த ஆசிரியரின் இந்த விழிப்புணர்வு முயற்சி கவனம் ஈர்த்துள்ளது.
