சென்னையில் எல்.ஐ.சி. பாலிசிதாரர் விஜயகுமாரின் முதிர்வுத் தொகையான ரூ.3.22 லட்சத்தைப் போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் மோசடி செய்ததாகக் கடந்த 2009-ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஏற்கெனவே மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மற்றொரு நபரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், 17 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த சென்னை மணலியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தபால்காரர் ராமமூர்த்தி (64) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
