Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இளம்பெண் தற்கொலை: கணவரைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் மறியல்!

சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் வஉசி தெருவை சேர்ந்தவர் சங்கீதா (26). இவரது கணவர் சந்தோஷ். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு குழந்தை இல்லை என்று தெரிகிறது. இதன்காரணமாக அடிக்கடி தம்பதி இடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் சந்தோஷ் சபரிமலைக்கு மாலை அணிவது தொடர்பாக மனைவியுடன் பேசியபோது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர் இருவரும் சென்றுவிட்டனர். நேற்று காலை 6 மணிக்கு சந்தோஷ் பணிக்கு சென்றுவிட்ட நிலையில், சங்கீதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சந்தோஷ் வீட்டுக்கு வந்தபோது மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு பெரியார் நகர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிந்தது. புழல் போலீசார் விசாரணை நடத்தி சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆவதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதனிடையே, சங்கீதாவின் உடல் வியாசர்பாடி பி.கல்யாணபுரத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு இறுதி சடங்கு செய்ய கொண்டுவரப்பட்டது. அப்போது அவர்கள், ‘’தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளது’’ என்று கூறி சங்கீதாவின் தாய் பரமேஸ்வரி மற்றும் உறவினர்கள் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் சாலையில் நேற்று மாலை 4 மணி அளவில் மறியலில் நடத்தினர்.

சங்கீதாவின் கணவர் சந்தோஷ், அவரது தாய் ஆகியோரை கைது செய்யவேண்டும்’’ என்று கோஷங்கள் எழுப்பினர். வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் வந்து மறியல் நடத்திவர்களை சமாதானப்படுத்தி மறியல் கைவிட செய்தனர். இதுசம்பந்தமாக புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!
Secret Link