Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காதலிக்காக திருடினோம்…. கல்லூரி மாணவர்கள் பகீர்

சென்னை, அம்பத்தூரில் மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் கால்வாயின் இரும்பு மூடிகள் அடிக்கடி திருடப்படுவதாக அதிகாரிகள் புகார் தெரிவித்த நிலையில், சிசிடிவி காட்சியின் அடிப்படையில் இரண்டு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அதில், புருஷோத்தம்மன் நகரை சேர்ந்த சுகுமார் மற்றும் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் ஆகிய இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், இருவரும் காதலியுடன் வெளியே செல்ல பணம் தேவைப்பட்டதால் மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் கால்வாயின் இரும்பு மூடியை திருடி விற்றதை ஒப்புக்கொண்டனர்.  காதலிக்காக இதை செய்தோம் என்று கூறிய அவர்கள் காதலிக்காக சிறைக்கு செல்வதில் கவலை இல்லை என்றும் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!