Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2.50 கோடி மதிப்பீட்டில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு புதிய கோசாலை…..

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான நெல்சன் ரோடு காட்டழகிய சிங்கபெருமாள் கோயில் அருகில் உள்ள 2.57 ஏக்கர் பரப்பளவில் ரூ 2.50 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய கோசாலை , மருந்தகம் மற்றும் தீவனம் வைக்கும் அறை கட்டும் பணியினை சென்னையில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். பணி நடைபெற உள்ள இடத்தில் பூமி பூஜை நடைபெற்றது இதில் கோயில் இணை ஆணையர்

மாரிமுத்து , உதவி செயற்பொறியாளர் அசோகன், இளநிலை பொறியாளர் நந்தகுமார் , திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் ஆண்டாள் இராம்குமார் , அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் கோயில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!