Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா…… ஒரே நாளில் 12,591 பேருக்கு கொரோனா……40 பேர் பலி

இந்தியாவில் நேற்று 10,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 12,591 ஆக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,45,401-லிருந்து 4,48,57,992 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 63,562-லிருந்து 65,286 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,31,190-லிருந்து 5,31,230 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 8,175 பேர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இன்று 10,827 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!