Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேங்கைவயலில் 11 பேருக்கு டிஎன்ஏ சோதனை நடத்த முடிவு

புதுகை மாவட்டம்  வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்  மனித கழிவுகள் கலக்கப்பட்டதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த கிராமத்தை சேர்ந்த 147 பேரிடம் விசாரணை நடத்தி இறுதியாக 11 பேரை சந்தேக நபர்கள் என்ற பட்டியலுக்கு கொண்டு வந்தனர். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

அந்த 11 பேரில் குற்றவாளிகளை கண்டறிய  அவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்து இதற்காக கோர்ட்டில் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர். அதன் பேரில் அவர்கள் 11 பேருக்கும் டிஎன்ஏ சோதனை நடத்த கோர்ட் அனுமதி வழங்கியது. அதன்படி அவர்களுக்க விரைவில் டிஎன்ஏ சோதனை நடத்தப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!