ஒபிஎஸ் அணியின் சார்பில் அதிமுக51 வது ஆண்டு துவக்க விழா – முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா மாநாடு நேற்று மாலை திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமியை
அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பில் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதிமுக தலைமை கழகம் வடிவில் இந்த மாநாட்டிற்கான மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. மைதானத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேர்கள் போடப்பட்டிருந்தது. இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்குகளால் மாநாடு நடைபெறும் இடம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது கண்கவர் நிகழ்வாக அமைந்தது. இந்த மாநாட்டில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



