Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 23ம் தேதி முடிகிறது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 3-வது வாரத்திலேயே தொடங்கி குறைந்தது 20 நாட்கள் நடைபெறும். ஆனால், சில நேரங்களில் டிசம்பரில் நடந்துள்ளது. 2017, 2018 ம் ஆண்டுகளில் இவ்வாறாக குளிர்கால கூட்டம் டிசம்பரில் நடந்துள்ளது. இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7-ம் தேதி தொடங்கி வரும் 29-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அந்தவகையில் முன் கூட்டியே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 23-ம் தேதி முடிக்க மக்களவையில் வணிக ஆலோசனைக்குழு கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிறிஸ்துமஸ், மற்றும் ஆங்கில புத்தாண்டு வருவதால் கூட்டத்தொடரை முன்னதாகவே முடிக்க வேண்டும் என மக்களவை தலைவர் ஓம்.பிர்லாவிடம் எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் முன்னதாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 23-ம் தேதி முடிவடையும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!