Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வங்க தேசத்துடன் 2வது ஒன்டே…..இந்தியாவுக்கு 272 ரன் இலக்கு

வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையே தற்போது ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. மிர்புரில் நடந்த முதல் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய வங்காளதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் சேர்த்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் வெளியேறிய நிலையில், 6வது வீரராக களமிறங்கிய மஹ்முதுல்லா 77 ரன்களும், 8வது வீரராக களமிறங்கிய மெகிடி ஹசன் மிராஸ் 100 ரன்களும் விளாசியதால் அணி நல்ல ஸ்கோரை எட்டியது. இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். உம்ரான் மாலிக், முகமது சிராஜ் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!