Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் தஞ்சை மேயர்…

தஞ்சை மாநகராட்சி 29-வது வார்டு மானம்புச்சாவடி ரெசிடென்சி பங்களா ரோட்டில் ரூ.7½ லட்சம் செலவில் அங்கன்வாடி மைய கட்டிடம் சீரமைக்கப்பட்டது. அதேபோல் சின்னையா பாளையம் பகுதியில் ரூ.10 லட்சம் செலவில் புதிய கழிவறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த 2 கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது. புதிய கட்டிடங்களை தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.முன்னதாக மாநகராட்சி கவுன்சிலர் ஸ்டெல்லா நேசமணி வரவேற்றார். இவ்விழாவில் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாநகர செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், மண்டலக் குழுத் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, மேத்தா, ரம்யா சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!