Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சட்டசபையில் சிரிப்பலை-தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள் – பிரேமலதா

சட்டசபையில் சிரிப்பலை-தண்ணீர் பாட்டில் கொடுத்தால்- பிரேமலதா

தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா பேசுகையில் பிறந்தநாள் தினத்தன்று முதல்வர் விஜய்க்கு ஒரு கோரிக்கை விடுத்தார். அவர் கூறியதாவது: உங்கள் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் சார்பில் முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். சட்டசபையில் எம்எல்ஏ.,க்களுக்கு டம்ளரில் தண்ணீர் கொடுக்கின்றனர். அதனால் அந்த ஊழியர்களுக்கு நிறைய வேலை செய்ய வேண்டியதாக இருக்கிறது. அதற்கு பதிலாக பாட்டிலில் தண்ணீர் வைத்து விட்டால் சுலபமாக இருக்கும். கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர் வைத்து விடலாம் என்பது எனது கருத்து, என்றார்.

அப்பொழுது எழுந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ”அப்படி தண்ணீர் பாட்டில்களை கொடுத்தால் வீசி எறிய வாய்ப்புள்ளது; அப்படி தர வேண்டாம்” என்றார். ஓபிஎஸ் கூறியது அவருடைய தனிப்பட்ட அனுபவமா என்று அறிய விரும்புகிறேன் என திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு கூறினார்.

இதனால் சபையில் சிரிப்பலை ஏற்பட்டது. (ஓபிஎஸ் அதிமுகவில் இருந்தபோது, பொதுக்குழு களேபரத்தில் தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டதை தங்கம் தென்னரசு மறைமுகமாக குறிப்பிட்டார்)தூக்கி எறிய வேண்டும் என முடிவெடுத்து விட்டால் டம்ளரை கூட தூக்கி அடிப்பார்கள் என பிரேமலதா விஜயகாந்த் பேசியபோது இன்னும் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

error: Content is protected !!