Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழ கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைப் பெற்றது. ஏலத்திற்கு தஞ்சாவூர் விற்பனைக் குழு, செயலாளர் சரசு தலைமை வகித்தார். கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி, விளம்பரம் மற்றும் பிரச்சார கண்காணிப்பாளர் சித்தார்த்தன், மேற்பார்வையாளர் பிரசாத் முன்னிலை வகித்தனர். பருத்தி மறைமுக ஏலத்தில் கும்பகோணம், இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சராசரி 1850 குவிண்டால் பருத்தி கொண்டு வரப் பெற்றது. கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், குத்தாலம், சேலம்,தேனி சார்ந்த 13 வியாபாரிகள் மற்றும் இந்திய பருத்திக் கழக அலுவலர்கள் ஏலத்தில் கலந்துக் கொண்டு அதிக பட்சம் குவிண்டாலுக்கு ரூ.6862, குறைந்தபட்சம் ரூ.5659, சராசரி ரூ.6439 என விலை நிர்ணயம் செய்தனர். பருத்தியின் மதிப்பு சராசரி 1.15 கோடி ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!