Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஐயப்பனுக்கு நாளை தங்க அங்கி.. சபரிமலையில் குவியும் பக்தர்கள்..

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ம் தேதி திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் நடை திறந்த நாள் முதல் பக்தர்கள் அதிக அளவில் வரத் தொடங்கினர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி என்ற நிலையிலும் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 38 நாட்களில் 26 லட்சத்து 476 பக்தர்கள் தரிசனம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், மண்டல பூஜையை முன்னிட்டு நாளை 26ம் தேதி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை வழிபாடு நடக்கிறது. இதனை காண பக்தர்கள் இன்றே சபரிமலையில் குவிந்து வருகிறார்கள். முக்கிய திருவிழாவான மண்டல பூஜை, நாளை மறுநாள் நடைபெற உள்ளது. அன்றைய தினம் தரிசனத்திற்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!