Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒற்றுமையுடன் செயல்பட்டால் …. எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடிக்கலாம்….சுப்பிரமணிய சுவாமி சொல்கிறார்

பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மணிப்பூரில் நடைபெறும் மதக்கலவரம் நீடித்துக் கொண்டே செல்கிறது. அங்கு மனித உரிமை மீறல்கள்  நிறைய நடக்கிறது. மெய்தி எனும் இந்து சமுதாயம் சுமார் 50 சதவீதம் பேர் உள்ளனர். மாற்று சமுதாயத்தினர் அவர்களை முந்த முயற்சிக்கிறார்கள். பிரதமர் மோடி அமெரிக்கா போவதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இது வருத்தம் அளிக்கிறது. கலவரம் நடக்கும் மணிப்பூர் தலைநகர் இம்பால் போய் பார்க்கவில்லை. பிரதமர் உடனே போய் கலவரத்தை அடக்க முயற்சி செய்ய வேண்டும்.

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பொறுத்தவரை ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. எல்லாரும் சேர்ந்து வந்தால், ஒற்றுமையாக செயல்பட்டால் மத்தியில் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது. நரேந்திர மோடி பிரதமராக இருந்த காலத்தில் எதுவும் செய்யவில்லை.

பிரதமர் மோடி நல்லது செய்தார் என இங்கு உள்ள ஜால்ரா போடுபவர்கள் கூறினார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. மோடி எதுவும் செய்யவில்லை என தொண்டர்கள் கூறுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!