Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குஜராத் ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி…. உச்சநீதிமன்றத்தில் ராகுல் அப்பீல்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் கர்நாடக மாநிலம் கோலாரில் பேசும்போது மோடி குறித்து அவதூறாக பேசினாராம். இது தங்கள் சமூகத்தை இழிவுபடுத்தியதாக குஜராத்தை சேர்ந்த மோடி சமூகத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் சூரத் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதில் ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டதுடன், அவரது எம்.பி. பதவியும் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து ராகுல் காந்தி, குஜராத் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார்.  அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதி  ஹேமந்த் பிரச்சக், இன்று  ராகுல் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தார்.  அத்துடன் 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கவும் நீதிபதி மறுத்து விட்டார்.

இதை எதிர்த்து ராகுல் காந்தி  உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய இருக்கிறார். இந்த அப்பீல் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படும் என  தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!