Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளுடன் தூய்மை பணியாளர்கள் மறியல்…

தூய்மை பணிகளை அவுட்சோர்சிங் விடும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும், தேர்தல் காலத்தில் நிறைவேற்றுவதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் , தமிழ்நாடு அரசின் குறைந்தபட்ச ஊதிய அரசாணையின்படி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் திருச்சி ஒத்தக்கடை

பகுதியில் இருந்து திருச்சி மாநகராட்சி அலுவலகம் வரை பேரணியில் ஈடுபட்டு மாநகராட்சி அலுவலக பிரதான நுழைவாயிலை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதன் காரணமாக மாநகராட்சி அலுவலகம் முன்பு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!