Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமலாக்கத்துறையை வைத்து பயமுறுத்த முடியாது…. கெஜ்ரிவால் கண்டனம்

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறையின் இந்த சோதனை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கிறோம் என்று ஆளும் திமுக தெரிவித்துள்ளது.

இந்த சோதனைக்கு டில்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் “அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கட்சிகளை உடைத்து அனைவரையும் அச்சுறுத்த பாஜக முயற்சிக்கிறது. இந்தியா போன்ற பெரிய நாட்டை அமலாக்கத்துறையை வைத்து பயமுறுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியாது” என்று தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!