Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் விஜய்யை சீண்டும் வகையிலான நயினாரின் பேச்சு- அண்ணாமலை கண்டனம்

சென்னை, தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என முதல்வர் விஜய்யை சீண்டும் வகையிலான நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு, அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

“சட்டப்பேரவையில் ‘அப்பா எங்கே, அப்பா எங்கே’ என்று தேடினால் எப்படி தெரியும்? வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் கேட்டால் தானே அப்பா யார் என்று சொல்வார்கள்” என்று நயினார் நாகேந்திரன் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். இதற்கு தவெக தரப்பும், தமிழக அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என கூறி உள்ளார்.

அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்று கொள்ள முடியாது.

இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல என்று அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!