Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரசன்ன மாரியம்மன் கோவிலில் பால்குடம் எடுத்த சமையல் கலைஞர்கள்…

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் ஆடிமாதம் முதல்வெள்ளியை முன்னிட்டு சமையல் கலைஞர்கள் சங்கத்தினரின் 42 ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி காவிரி துலாக்கட்டத்தில் இருந்து சக்தி கரகத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தும் மஞ்சள் உடை உடுத்திய ஏராளமான சமையல் கலைஞர்கள் பால்குடம் எடுத்தும் மயிலாடுதுறை கோவில் யானை அபயாம்பிகை முன்னே செல்ல மேள தாளங்கள் ஒலிக்க பால்குடம் எடுத்த பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து பால்குடமானது கோவிலை வந்தடைந்தது. அங்கு பக்தர்கள் கொண்டுவந்த பாலைக்கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!