Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீடு வழங்கவில்லை… பொதுமக்கள் சாலை மறியல்….

திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள செக்போஸ்ட் பகுதியில் உள்ள கன்னிமார் தெரு ,நேதாஜி நகர் பகுதிகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர் . அப்பகுதியினை குடியிருப்புகளை நெடுஞ்சாலை துறையின் சார்பாக சாலை விரிவாக்கத்திற்காக அப்பகுதி பொதுமக்களுக்கு வீட்டு வசதி வாரியம் சார்பாக வீடுகள் வழங்கப்படுவதாக கூறி வீடுகளை அகற்றியுள்ளனர் .

வீடுகளை அகற்றி இதுவரை வீடுகளுக்காக டோக்கன் வழங்கப்படவில்லை இரண்டு நாட்களாக வெயிலில் தான்

வாழ்ந்து வருகிறோம் என கூறி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் செக்போஸ்ட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததில் அடிப்படையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!