Skip to content

கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை…. மேட்டூருக்கு நீர்திறப்பு அதிகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடகத்தின் 10 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கு பருவ மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று இரவு முதல் கனமழையின் காரணமாக குடகு, உத்திர கன்னடா, சிக்கமகளூரு, தக்சின கன்னடா, பெலகாவி, ஹாசன், தார்வாட், தாவண்கரே உள்ளிட்ட 10 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் ஆகிய கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, மைசூரு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கே.ஆர்.எஸ், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்தும் நீர் வெளியேற்றமும் அதிகரித்துள்ளது. ஹாரங்கி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 20 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில்,நேற்று காலை முதல் கபினி அணையில் இருந்து 10,000 கன அடி நீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 2,500 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கர்நாடகத்தில் இருந்து மேட்டூர் அணைக்கு வினாக்கு 15ஆயிரம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர் வருகிறது.  கனமழை காரணமாக கர்நாடகத்தின் குடகு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடகு மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!