Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போலீஸ் ஸ்டேசன் புகுந்து தகராறு…. அரவக்குறிச்சி பாஜக நிர்வாகி கைது…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவராக  இருப்பவர் உதயகுமார்  இவரது உறவினரின் ஆட்டுக்குட்டி சில நாட்களுக்கு முன்பு வாகன விபத்தில் இறந்துள்ளது.

இதுகுறித்து  அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.   இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக அரவக்குறிச்சி பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் உதயகுமார் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பேசிக் கொண்டிருந்த போது காவல்துறையினருக்கும், உதயகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

உதயகுமார் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மரியாதைக்குறைவாக பேசி,  அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமலும், மிரட்டியும் உள்ளார். இதைத்தொடர்ந்து அரவக்குறிச்சி போலீசார் உதயகுமார் மீது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மதரீதியாக மோதலை தூண்டும் வகையில் பேசி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து உதவியகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!