Skip to content

தஞ்சை அருகே குழந்தையுடன் சென்ற மகளை காணவில்லை … தாய் போலீசில் புகார்….

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி வீரலட்சுமி. இவர்களின் மகள் திவ்யபாரதி (24). அவரது கணவர் செல்வம். இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக திவ்யபாரதி தனது தாய் வீட்டுக்கு குழந்தை லிவித்திகா (4) வந்து தங்கியிருந்தார். தொடர்ந்து கடந்த 30ம் தேதி தனது குழந்தை லிவித்திகாவுடன் திவ்யபாரதி வெளியில் சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது அம்மா வீரலட்சுமி பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளார். ஆனால் திவ்யபாரதியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து கள்ளப்பெரம்பூர் போலீசில் வீரலட்சுமி (44) புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!