Skip to content

நீ தான் என் சூப்பர் ஸ்டார்… நடிகை ஜாக்குலினுக்கு காதலன் சுகேஷ் கடிதம்

தொழிலதிபர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த சுகேஷ் சந்திரசேகர், பல்வேறு வழக்குகள் தொடர்பாக டில்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிறந்தநாளையொட்டி உருகி உருகி தன் கைப்பட காதல் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்

சிறையில் இருந்தாலும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதான சுகேஷ் சந்திரசேகரின் காதல் குறையவில்லை. காதலிக்கு அடிக்கடி கடிதம் எழுதுவார். இன்று (ஆகஸ்ட் 11) ஜாக்குலின் பெர்னாண்டஸின் பிறந்தநாள். சுகேஷ் சந்திரசேகர் தனது காதலிக்கு தன் கைப்பட காதல் கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. Also Read – `ஜெய்பீம்’ மணிகண்டன் நடிக்கும் புதிய படம் கடித விவரம் வருமாறு:- “இந்த பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீரும். நான் சீக்கிரம் வருவேன். அடுத்த வருடம் பிறந்தநாளை நாம் ஒன்றாகக் கொண்டாடுவோம்.

நான் அதை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்.  உலகம் பொறாமைப்படலாம். நீ என் செல்ல பொம்மை. நீ எனக்கு ஸ்பெஷல், நீ என் சூப்பர் ஸ்டார். நீ என் வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்தவள். பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடு. எதற்கும் பயப்பட வேண்டாம். நான் உனக்காக இருக்கிறேன். எனக்காக இன்னும் ஒரு துண்டு கேக் சாப்பிடு’ என கடிதத்தில் கூறி உள்ளார். 

தொழில் அதிபர்களை ஏமாற்றி பல கோடி பண மோசடி செய்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இவர் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள பரிசு பொருட்களை வாங்கி கொடுத்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது. இருவரும் காதலித்ததாக கூறப்பட்டது. இருவரும் முத்தம் கொடுத்து கொள்ளும் புகைப்படங்களும் வெளியானது. ஜாக்குலினிடம் அவரை கதாநாயகியாக வைத்து ரூ.500 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க இருப்பதாக சுகேஷ் உறுதி அளித்த தகவலும் அம்பலமானது. சுகேஷ் சந்திரசேகரை 2 முறை சந்தித்தேன். அவரால் எனது வாழ்க்கை நரகமாகிவிட்டது என்று ஜாக்குலின் தெரிவித்து இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!